22.06.2018
அரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேரும் அடுத்த வாரம் நடைபெறவுள்ள மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்கு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இரு தரப்பினரும் கூட்டு எதிர்க்கட்சி என்ற வகையில் செயற்படும் நிலை உள்ளதாகவும் அவர் கூறினார்.
நேற்று (21) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.






0 comments:
Post a Comment