Wednesday, June 13, 2018

அமீரகம் மீது ஐ.நா.வில் வழக்கு தொடர்வோம் : கத்தார் அரசு எச்சரிக்கை...!





   June 13, 2018


அமீரகம் மீது ஐக்கியநாடுகள் சபை நீதிமன்றத்தில் வழக்கு தொடர கத்தார் தயாராகி வருகிறது. வளைகுடா கூட்டமைப்பில் இருந்து கத்தாரை பிறநாடுகள் விலக்கிவைத்தன.

தீவிரவாதத்துக்கு கத்தார் உதவுவதாக அவை குற்றம் சாட்டின.இதனை ஆதாரத்துடன் முன்வைக்க கத்தார் கோரியது. அதற்கு சகோதரநாடுகள் மவுனம் சாதிக்கின்றன. பொய்க்குற்றச்சாட்டுக்குள்ளான கத்தார் இப்பிரச்சனையை சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச்செல்ல தயாராகிறது.

வளைகுடா கூட்டமைப்பில் இருந்து விலக்கப்பட்டு ஓராண்டு கடந்துள்ள நிலையில், அமெரிக்கா, குவைத் நாடுகளின் சமரச திட்டங்களை ஏற்க பிறநாடுகள் மறுத்துவிட்டன.எனவே, நீதிமன்ற த்தை நாடுவதை தவிரவேறு வழியில்லை.

கத்தாரை சேர்ந்த மக்கள், பெண்கள் வளைகுடா நாடுகளில் குடும்பங்களாக வசித்துவருகின்றனர். தங்கள் சொந்தங்களை பார்க்கவிடாமல் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இது ஐ.நா.விதிகளின்படி தவறானது. 2017ல் அமீரகமும், கத்தாரும் ஐநாவின் இனப்பாகுபாடு தடுப்புக்கொள்கையில் கையொப்பம் இட்டுள்ளன. அதன்படி, இருநாட்டு குடிமக்களும் பாரபட்சமின்றி நடத்தப்பட வேண்டும்.

அமீரகம் அதனை மீறி வருகிறது. இதனால் அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா.மனித உரிமை நீதிமன்றத்தில் கத்தார் முறையிட உள்ளமை குறிப்பிடத்தக்கது

.(Mohamed Hasil)

0 comments:

Post a Comment