JUNE 16, 2018
6 மாத கால கடூளிய சிறை தண்டனை வழங்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஞானசார
தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரபலங்கள் சிலர் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள நிலையில் பௌத்த அமைப்புகள் சிலவும் அவருக்கு ஆதரவாக போர்க்கொடி தூக்கியுள்ளன.
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு ராவன பலய அமைப்பு மற்றும் முறுத்தொட்டுவே ஆனந்த சாகர தேரர் கடிதம் மூலம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






0 comments:
Post a Comment