Saturday, June 23, 2018

தபால் ஊழியர் பகிஸ்கரிப்பால் அவதியுறும் முதியவர்கள்

June.23.2018


நாடளாவிய ரீதியில் தபால் உத்தியோகத்தர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையால் சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்பிகை அமைச்சினால் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு இன்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.

சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்பிகை அமைச்சினால் வழங்கப்பட்ட சுற்று நிரூபத்திற்கமைய இக்கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.


“கிழக்கு மாகாண சமூக சேவைத் திணைக்களத்தினால் வழங்கப்படும் பொதுசன மாதாந்த உதவிப் பணம் 250 ரூபாய்க்கான சுற்று நிரூபம் எங்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

இதனால் குறித்த பணத்தினை பொதுசன உதவி பெறுவோருக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் அப்பணம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்” வாழைச்சேனை பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தெரிவித்தார்.

சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்பிகை அமைச்சினால் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவு 15ம் திகதி தொடக்கம் 18ம் திகதிக்குள் தபால் நிலையத்தில் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகும்.

0 comments:

Post a Comment