Saturday, December 1, 2018

நாட்டில் HIV தொற்றுக்கு இலக்கானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

01 Dec, 2018

நாட்டில் எச்.ஐ.வி. தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் 310 பேர், எச்.ஐ.வி. தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும், கடந்த வருடம் 285 பேர் மாத்திரமே எச்.ஐ.வி. தொற்றுக்கு இலக்காகியிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, எச்.ஐ.வி. தொடர்பில் விழிப்புணர்வூட்டும் பேரணியொன்று கொழும்பு மாநாகரசபைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

0 comments:

Post a Comment