Sunday, December 23, 2018

நீதிபதிகள் நியமனம்: மீண்டும் முரண்டு பிடிக்கும் மைத்ரி!

23.12.2018

அரசியலமைப்பு கவுன்சிலினால் பரிந்துரைக்கப்பட்ட உச்ச நீதிமன்றத்துக்கான நீதிபதிகள் இருவரின் நியமனத்துக்கு இணங்க முடியாது என தொடர்ந்தும் மறுதலித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

ஏழு நீதிபதிகளை நியமித்திருந்த நிலையில் அண்மையில் ஜனாதிபதியின் அரசியல் சட்ட மீறலை குறித்த நீதிபதிகளே விசாரித்து தீர்ப்பளித்திருந்தனர். எஞ்சியிருக்கும் இருவரது பெயர்களையும் மீள் பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ள போதிலும் அரசியலமைப்பு சபை அதனை நிராகரித்துள்ளது.

இந்நிலையில், இந்நியமன விவகாரங்களும் ஜனாதிபதியின் தனிப்பட்ட விருப்பு - வெறுப்பு அடிப்படையிலானது என்பதால் சட்டமீறலாகும் எனவும் அதற்கெதிராக வழக்கு தொடரப்படக் கூடும் எனவும் அவதானிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment