Monday, December 3, 2018

மஹிந்த அரசாங்கத்துக்கு இன்று முதல் ஒரு ஆவணத்திலாவது கையொப்பமிட முடியாது- அஜித் பீ.பெரேரா


December 3, 2018

மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பின்படி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கோ, அவரது அமைச்சரவைக்கோ இதன் பிறகு எந்தவொரு ஆவணத்திலாவது உத்தியோகபூர்வ ஒப்பமிடுவதற்கு முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு இன்று (03) மாலை வழங்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

ஜனாதிபதிக்கு வெட்கம், பயம் இருக்குமாயின் தற்பொழுது நாட்டில் நிலவும் நெருக்கடி நிலையை இன்று (03) முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment