Monday, December 3, 2018

அதே அமைச்சு பதவிகளை தர வேண்டும்: ரிசாத்!

03.12.2018

மஹிந்த மற்றும் அவரது அமைச்சரவை இயங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ள நிலையில் 122 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கும் நீதிமன்ற தீர்ப்புக்கும் நாடாளுமன்ற பெரும்பான்மைக்கு செவி சாய்த்தும், மதிப்பளித்தும் ஜனாதிபதி மைத்ரிபால உடனடியாக ஒக்டோபர் 26ம் திகதிக்கு முற்பட்ட அதே அமைச்சரவையை நியமித்து ரணிலை பிரதமராக்க வேண்டும் என தெரிவிக்கிறார் ரிசாத் பதியுதீன்.

மஹிந்த தரப்போடு டீல் பேசுவதைத் தவிர்த்துக்கொண்ட முஸ்லிம் கட்சிகள் இரண்டும் உம்றா சென்று, ஒரே ஹோட்டலில் தங்கியிருந்து 'ஒற்றுமை' பேசிய அதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியுடன் தொடர்ந்தும் இணைந்திருந்தன.

இந்நிலையில், மீண்டும் பழைய அமைச்சரவை அப்போது இருந்தது போன்றே நியமிக்கப்பட வேண்டும் என ரிசாத் இன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment