03.12.2018
தற்போதைய பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்களுக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகளின் சமர்ப்பணங்கள் நிறைவுப்பெற்றுள்ளன.
இந்தநிலையில், தீர்ப்புக்காக விசாரணைகள் மாலை 3 மணி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேன்முறையீட்டு நீதிமன்ற தவிசாளரான, நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜூன் ஒபேசேகர ஆகியோர் தலைமையில் இந்த மனு மீதான விசாரணைகள் இடம்பெறுகிறன.
குறித்த மனு கடந்த 23ஆம் திகதி, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 நாடாளுமன்ற உறுப்பினர்களினால் கையொப்பம் இடப்பட்ட நிலையில், தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment