Friday, December 21, 2018

பல்டி புகழ் வடிவேலும், இராஜாங்க அமைச்சரானார்

December 22, 2018 

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சராக நேற்று சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி செயலத்தில் நேற்று மாலை அவர் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்துகொண்டதை அடுத்து

நேற்று மாலை இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இதன் போது வடிவேல் சுரேஸ் பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அடிக்கடி கட்சி தாவலில் ஈடுபட்டு பெரும் சர்ச்சைகளுக்கு வடிவேல் சுரேஸ் ஆளாகியிருந்தார்.

மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி மைத்திரி - மகிந்த தலைமையினால அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய வடிவேல் சுரேஸ் அமைச்சு பதவியும் பெற்றிருந்தார்.

எனினும், அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளை தொடர்ந்தும் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்ட அவர் இனி ஒருபோதும் கட்சி தாவல்களில் ஈடுபட போவதில்லை எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்ட நிலையில், வடிவேல் சுரேஸ் பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன் பதவியேற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment