December 1, 2018
பழச்சாறு தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த வரி குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு கிராம் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த 50 சத வரியை 30 சதமாகக் குறைப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பழச்சாறு மற்றும் பிஸ்கட் தயாரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றபோதே வரியை குறைப்பதற்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனைத் தவிர, இரசாயன சுவையூட்டிகளுக்காக 6 கிராம் வரை மற்றும் பழச்சாறு வகைகளுக்காக 9 கிராம் வரையும் வரியை குறைக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
நன்றி
அரச தகவல் திணைக்களம்






0 comments:
Post a Comment