Monday, December 3, 2018

24 மணி நேரத்துக்குள் முடிவு: இப்போது 'அரசு' இல்லை: மைத்ரி!


03.12.2018

மஹிந்த மற்றும் அவரது அமைச்சரவை இயங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் நாட்டில் தற்போது அரசொன்று இல்லையென்பதை ஏற்றுக்கொண்டுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இடம்பெற்ற சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர் பாதுகாப்பு கவுன்சிலுடன் அவசர ஆலோசனை நடாத்தப் போவதாகவும் அடுத்த 24 மணி நேரத்துக்குள் தீர்க்கமான முடிவொன்றை எடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மைத்ரிபால சிறிசேன தனது நிலைப்பாட்டை மாற்றி ஜனநாயக வழிமுறைக்குத் திரும்ப வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment