Friday, December 21, 2018

பஸ் கட்டணம் குறைக்கப்படுமா?


December 21, 2018

பஸ் கட்டணம் திருத்தப்படுவது சம்பந்தமாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலையிட வேண்டும் எனத் தெரிவித்து மகஜர் ஒன்று கையளிக்கப்பட உள்ளதாக அனைத்து இலங்கை பஸ் பயணிகள் சங்கம் கூறியுள்ளது.

குறித்த மகஜர் இன்று மாலை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

குறைந்நத கட்டணம் 10 ரூபாவாக குறைக்கப்பட வேண்டும் என்றும், ஏனைய கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் பஸ் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று மீண்டும் எரிபொருள் விலை குறைக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலை குறைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment