Monday, December 3, 2018

பிரதமர், அமைச்சர்கள் பதவி வகிப்பதற்கு இடைக்கால தடையுத்தரவு

03 Dec, 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் அந்தப் பதவிகளை வகிப்பதை இடைநிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 122 பேரால் தாக்கல் செய்யப்பட்ட மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அத்துடன், வழக்கின் பிரதிவாதிகளை மன்றில் ஆஜராகுமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அழைப்பாணை விடுத்துள்ளது.

இதேவேளை, இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ளது.

0 comments:

Post a Comment