Saturday, December 1, 2018

2020க்குள் மூன்று தேர்தல்கள்: தேசப்பிரிய!

01.11.2018

2020 நவம்பர் மாதம் 13ம் திகதி தமது தலைமையின் கீழான தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதாக தெரிவிக்கின்ற மஹிந்த தேசப்பிரிய 2020 ஒக்டோபர் 31ம் திகதிக்குள் நாட்டின் மூன்று தேர்தல்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கிறார்.

இழுபறிக்குள்ளாகியுள்ள மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்களை இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.

தேர்தல் ஆணைக்குழு சுயாதீனமாகவே இயங்குவதாக தெரிவிக்கின்ற போதிலும் நாடாளுமன்றில் 'எல்லை நிர்ணயம்' என்ற போர்வையில் தேர்தலை இழுபறிக்குள்ளாக்கிய நிலையே காணப்படுகின்றமையும் சுயாதீனமாக தேர்தல் தினத்தை அறிவிக்க முடியாத நிலையிலேயே தேர்தல் ஆணைக்குழு இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment