Tuesday, November 6, 2018

குவைத்தில் மழை வெள்ளம் ~ அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை!



November 06, 2018 

குவைத்தில் கடந்த 2 நாட்களாக வெளுத்துவாங்கும் மழையால் ஊரெங்கும் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுவதால் குவைத் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், வங்கிகள் என அனைத்திற்கும் பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலையில் தனது விமான போக்குவரத்தை ரத்து செய்வதாக அறிவித்திருந்த குவைத் ஏர்வேஸ் விமான நிறுவனம் தனது அறிவிப்பை திரும்பப்பெற்று கொண்டுள்ளதுடன் விமான போக்குவரத்து வழமைபோல் இயங்கும் எனவும் அறிவித்துள்ளது.

குவைத் உள்துறை அமைச்சகம் சார்பில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வது, பாதிக்கப்பட்டுள்ள சாலைகளை போக்குவரத்திற்கு மூடி மாற்றுப்பாதையில் பயணிக்கச் செய்வது, வெள்ளநீர் சூழ்ந்துள்ள சுரங்க நடைபாதைகள் மற்றும் நெடுஞ்சாலைகளிலிருந்து வெள்ளநீரை அகற்றுவது போன்ற பணிகளை முடிக்கிவிட்டுள்ளனர்.

Source: Gulf News

0 comments:

Post a Comment