Sunday, November 11, 2018

ரணில் ஜனாதிபதி- சஜித் பிரதமர் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் கோசம்

November 11, 2018

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாசவை பிரதமர் வேட்பாளராக களமிறக்குமாறு தென் மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவர் தென்னகோன் நிலமே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை களமிறக்குமாறும் தென் மாகாண சபை கேட்டுள்ளது.

ரணில் -ஜனாதிபதி, சஜித் -பிரதமர் என்ற கோசத்தின் கீழ் எதிர்வரும் பொதுத் தேர்தலை ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி கொள்வோம் எனவும் அவர் கூறியுள்ளார். 


0 comments:

Post a Comment