Sunday, November 11, 2018

மஹிந்தவின் தேர்தல் களத்தில் கிரிக்கெட் அணியின் பிரபல வீரர்கள்?

11.11.2018

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் இருவர் 2019 ஆம் ஆண்டு பொது தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வட்டாரங்கள் கூறுகின்றன.

இதில் தற்போது கிடைத்த தகவல்களின் படி முன்னாள் வீரர் திலகரட்ன டில்ஷான் களுத்துறை மாவட்டம் சார்பில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அக்கட்சி இந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை. அத்துடன் மற்றய வீரர் யார் என்பது தொடர்பிலும் தகவல்கள் வெளியாகவில்லை.

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ உட்பட சிலர் பொதுஜன பெரமுன முன்னணியின் உறுப்புரிமையை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சுதந்திர கட்சியில் இருந்து மேலும் பலர் உத்தியோகப்பூர்வமாக விலகி பொதுஜன பெரமுனவில் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

JVP News

0 comments:

Post a Comment