11 NOVEMBER 2018 -
கடந்த ஆறு வருடங்களாக உலக சந்தையில் அதிகரித்து சென்ற தங்கத்தின் விலை கடந்தவரத்தில் குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளது.
கடந்த ஆறு வாரங்கலாக தங்கத்தின் விலை அதிகரித்தே காணப்பட்டது.
எனினும் கடந்தவாரத்தில் பாரியளவு சரிவடைந்துள்ளது.
இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஆயிரத்து 218 டொலராக பதிவாகியுள்ளது.
அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதங்கள் அதிகரித்தமையுடன், தங்கத்திற்கான கேள்வியும் குறைவடைந்தமை இதற்கு காரணமாகும்.
ஒரு வாரத்திற்குள் நூற்றுக்கு 1.2 சதவிகிதம் தங்கத்தின் விலை சரிவடைந்துள்ளது.
மேலும் உலக சந்தையில் வெள்ளியின் விலையும் குறைவடைந்துள்ளதோடு, பிளாட்டினத்தின் விலையும் கடந்தவாரத்தினுள் நூற்றுக்கு 1.2 சதவிகிதம் சரிவடைந்தள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
0 comments:
Post a Comment