November 8, 2018
பொதுஜன பெரமுன எதிர்வரும் காலங்களில் தாமரை மொட்டு சின்னத்திலே போட்டியிட வேண்டும் என்பது கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.
இருப்பினும் தற்போதைய அரசியல் மாற்றத்தின் பிரகாரம் இரண்டு தரப்பினரும் திருப்தியடைய கூடிய தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகல காரியவசம் தெரிவித்துள்ளார்.
இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும், பொதுஜன பெரமுனவும் எவ்வாறு போட்டியிடும் என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுமே தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment