Sunday, November 11, 2018

ஐ.தே.க.யிலிருந்து சென்றவர்களுக்கு தேசியப்பட்டில் உறுப்புரிமை- ஐ.ம.சு.மு.

November 11, 2018

மைத்திரி – மஹிந்த அரசாங்கத்தை ஆதரித்து ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வந்து இணைந்து கொண்டவர்களுக்கு அடுத்த தேர்தலில் தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்படவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆனந்த ஆலுத்கமகே, அசோக பிரியந்த, எஸ்.பீ. நாவின்ன, விஜேதாச ராஜபக்ஷ, அசோக பிரியந்த, வடிவேல் சுரேஷ், துனேஷ் கங்கந்த மற்றும் வசந்த சேனாநாயக்க ஆகியோருக்கே இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தேசியப் பட்டியல் உறுப்புரிமை வழங்கப்படவுள்ளது.  

0 comments:

Post a Comment