01.11.2018
இலங்கை பெற்றோலிய வள கூட்டுத்தாபன தலைமையகத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரின் இறுதிச் சடங்குகள் நேற்று இடம்பெற்றன.
இலங்கை பெற்றோலிய வள கூட்டுத்தாபன தலைமையத்திற்கு, முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சென்றபோது, அங்கு அவருக்கு ஊழியர்கள எதிர்ப்பு தெரிவித்தமையினால், அமைதியின்னை ஏற்பட்டது.
இதனையடுத்து முன்னாள் அமைச்சரின் மெய்ப் பாதுகாவலர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்தனர்.
அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுள் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் உடுநுவர – கெலிஒய பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் ஆவார்.
இதையடுத்து, முன்னாள் அமைச்சரின் பாதுகாவலர் கைது செய்யப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சரும் கடந்த 29ம் திகதி கைது செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, முன்னாள் அமைச்சர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், மெய்ப்பாதுகாவலர் எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை , இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட பெற்றோலிய வள கூட்டுத்தாபன ஊழியர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஒரு சட்டமும் , அர்ஜூன ரணதுங்கவிற்கு ஒரு சட்டமுமா உள்ளது என கேள்வி எழுப்பியிருந்தனர்.
Hiru
0 comments:
Post a Comment