06.11. 2018
பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் எக்காரணம் கொண்டும் , கட்சியின் தலைமைக்கும் துரோகம் செய்யமாட்டார் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கின்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியூதீன் இன்று தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம்.எம்.இஸ்மாயில் குறித்து வினவிய போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வீ.சி.இஸ்மாயிலுக்கு நாம் தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கியமை நாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவும், சம்மாந்துறை மண்ணையும், எமது கட்சியின் ஆதரவாளர்களையும் கௌரவப்படுத்துவதற்காகவுமே ஆகும்.
இந்த நன்நோக்கின் அடிப்படையில் அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நாம் வழங்கிய போது அவர் தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்சிக்கும், தலைமைக்கும் மாறு செய்யமாட்டேன் என்றும், சம்மாந்துறை மண்ணுக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் பதவிக்காக கட்சிக்கும், தலைமைக்கும் மாற்றமான நடவடிக்கைகளையோ, கட்சி மாறும் நடவடிக்கைகளையும் செய்ய மாட்டேன் என்று உறுதி அளித்துள்ளார்.
ஆதலால், அவர் கட்சிக்கும், தலைமைக்கும் கட்டுப்பட்டு செயற்படுவார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதென்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியூதீன் தெரிவித்தார்.
நன்றி
-M.Sahabdeen
VEN
0 comments:
Post a Comment