Monday, November 5, 2018

மைத்ரியுடன் சந்திப்பு: ராஜித விளக்கம்!

06.11.2018

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் அவரை சந்தித்திருந்த ராஜித சேனாரத்ன, தனது சந்திப்பு குறித்து விளக்கமளித்துள்ளார்.

கட்சி தாவும் எந்தப் பேச்சுக்கும் இடமில்லையென தெரிவிக்கும் அவர், மஹிந்தவின் நியமனம் குறித்து தன்னிடம் மைத்ரிபால சிறிசேன வழங்கிய விளக்கத்தைத் தான் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, மைத்ரியின் முடிவால் ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலை தொடர்பில் தான் விளக்கிச் சொன்னதாகவும் சந்திப்பு பயனுள்ளதாக இருந்ததாகவும் ராஜித மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment