November 8, 2018
தனிப்பட்ட முக்கிய விஜயம் ஒன்றின் பேரில் தான் வெளிநாடு சென்றிருந்ததாகவும் அந்த நிலையில் தன்னைப் பற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் சில இணையத்தளங்கள் தவறான தகவல்களைப் பரப்பியுள்ளதாகவும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
நேற்று வெளியான செய்தி குறித்து அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளதாகவும் அரச ஊடகமொன்று அறிவித்துள்ளது.
எனது அரசியல் வாழ்க்கையை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்தவும் அதன் அங்கத்துவத்தை அதிகரிக்கவுமே அர்ப்பணித்துள்ளேன். சுதந்திரக் கட்சியுடன் இணைந்து மக்களின் நன்மைக்காக பாடுபடுவதில் நான் திடமாக இருக்கிறேன்.
நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும் நாட்டின் எதிர்கால நன்மைக்காக நேர்மையாக செயற்படுவேன். அதேபோல் இந்த இரு தலைவர்களுக்கும் அனைத்து பேதங்களையும் மறந்து அனைவரும் ஆதரவு வழங்க வேண்டுமென்று அழைப்பு விடுக்கிறேன் என்று அவர் அந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
0 comments:
Post a Comment