Thursday, November 1, 2018

முதலாளிமார் சம்மேளனத்துடன் இனிமேல் எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லை

01.11.2018

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்த விடயத்தில் முதலாளிமார் சம்மேளனத்துடன் இனிமேல் எந்தவித பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்போவதில்லை என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை – செத்சிறிபாயவில் உள்ள பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற முதலாளிமார் சம்மேளனத்துடனான பேச்சுவார்த்தையின் பின்னர் நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று முதலாளிமார் சம்மேளனத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தீபாவளி முற்பணத்தை வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டதே தவிர, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை வேதனம் குறித்து பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும், ஆயிரம் ரூபா அடிப்படை வேதன கோரிக்கையை முன்வைத்து தீபாவளி பண்டிகையின் பின்னர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்ற மற்றுமொரு ஊடக சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் கலந்துகொண்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் ஊடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பல்வேறு நலன்புரித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment