Thursday, November 8, 2018

ஜனாதிபதி விரும்பினால் நாடாளுமன்றை கலைக்கலாம்: மஹிந்த


09.11.2018

19ம் திருத்தச் சட்டத்துக்கமைவாக நான்கரை வருடங்களுக்கு முன்பாக நாடாளுமன்றமைக் கலைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டு வருகின்ற போதிலும் ஜனாதிபதிக்கு அதற்கான அதிகாரம் இருப்பதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.

நாடாளுமன்றில் தனக்குத் தேவையான பெரும்பான்மைப் பலம் இருப்பதாக தெரிவிக்கின்ற மஹிந்த, ஜனாதிபதி விரும்பினால் நாடாளுமன்றைக் கலைக்க முடியும் எனவும் தெரிவிக்கிறார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் வைத்தே நேற்றைய தினம் மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment