November 22, 2018
அரசியலமைப்பு மற்றும் ஏனைய சட்ட விதிகளின் அடிப்படையில் ஒன்றிணைந்த நிதியின் கடன் தவனையை செலுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை என நிதி அமைச்சு மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிதி அமைச்சு மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு செலுத்த வேண்டிய கடன் தவனைகள், கடன் பெற்றுக் கொள்ளும் போது செய்துக் கொள்ளப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடன் செலுத்தும் விடயத்தில் இலங்கை இதுவரையில் எவ்வித கலங்கமும் ஏற்படாத விதத்தில் செயற்படுவதாகவும் அதனடிப்படையில் உரிய முறையில் கடனை செலுத்துவதாகவும் நிதி அமைச்சு மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அடுத்த வருடம் செலுத்த வேண்டியிருக்கும் சர்வதேச இறைமை பிணைமுறிதொடர்பான 1500 மில்லியன் டொலர்கள் பெறுமதி வாய்ந்த கடனும் திருப்பிச் செலுத்தப்பட இருக்கிறது. இதற்குப் பொறுப்பான நிதி மத்திய வங்கியின் ஒதுக்கத்தில் காணப்படுகிறது. இதற்கென மத்திய வங்கி நெருக்கமான முறையில் செயற்பட்டு வருவதாகவும் நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.






0 comments:
Post a Comment