07.11.2018
இறக்காமம் கல்விக் கோட்டத்தில் இம்முறை க.பொ.த(சா/த) பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களின் நலன் கருதி இறக்காமம் கல்விக் கோட்டத்தில் இரண்டாம் தவணைப் பரீட்சையில் விஞ்ஞானப் பாடத்தில் குறைந்த புள்ளிகளைப் பெற்ற சுமார் 100 மாணவர்களுக்கான பாட மேம்பாட்டுச் செயலமர்வு இறக்காமம் அஸ்றப் மத்திய கல்லூரியில் நேற்று 06
இடம்பெற்றது,
இந்நிகழ்வானது அய்மன் கலைமன்றப் பணிப்பாளர் தேசாபிமானி எஸ்.எம்.சன்சீர் அவர்களின் தலமையில் நடைபெற்றது.இச்செயலமர்வில்
அகில இலங்கை HRF நிறுவன அனுசரணையுடன், இறக்காமம் அய்மன் கலை, கலாச்சார மன்றத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது .
இந்நிகழ்வில் கலந்து கொண்ட இறக்காமம் உதவிப் பிரதேச செயலாளர் நஹிஜா முஸப்பிர் , இறக்காமம் அஸ்றப் மத்திய கல்லூரியில், அதிபர் ஏ.எச்.ஜெசீம்
விஞ்ஞானப் பாட வளவாளராக ஏ.எல்.றிஸ்வான்ஆசிரியர்
மற்றும் அய்மன் கலை கலாச்சார மன்ற சிரேஸ்ட ஆலோசகர் சட்டத்தரணி ஹாரிஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments:
Post a Comment