11.11.2018
அதிகாரத்திற்கு வரும் அரசாங்கம் ஒன்றிற்கு ஆதரவளிப்பது குறித்து தேர்தலில் சுயாதீனமாக போட்டியிட்டதன் பின்னரே தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மக்காவிற்கான வழிபாட்டு பயணத்தை நிறைவுசெய்து கொண்டு இன்று நாடு திரும்பிய நிலையில், கட்டுநாயக்கவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் இதனை தெரிவித்தார்.
இதனிடையே, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நாளை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரவுப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment