Friday, November 2, 2018

மஹிந்த நிர்வாகம் ஆரம்பித்ததும் அதிரடி விலைக்குறைப்புகள்!


02.11.2018

மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு வரி மற்றும் விலை குறைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு சேவை வரி, சீனி, பருப்பு மற்றும் கடலை போன்றவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள அதேவேளை பெற்றோல் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

ரணில் - மைத்ரி அரசிலும் ஆரம்பத்தில் குறைக்கப்பட்ட விலைகள் பின்னர் ஏற்றம் கண்ட அதேவேளை அப்போதும் இப்போதும் மைத்ரிபால சிறிசேனவே ஜனாதிபதியாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment