Wednesday, November 7, 2018

பலருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்திய மைத்திரியின் இன்றைய திடீர் நடவடிக்கை


16.11.2018

ஊடகத்துறை அமைச்சு மற்றும் அதன் கீழ் காணப்படும் நிறுவனங்கள் உள்ளிட்ட விடயங்கள் அனைத்தும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக , அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பிரகாரம் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய அமைச்சுகளின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ள போதிலும், அவரது கட்டுப்பாட்டுக்குள் வரக்கூடிய நிறுவனங்களின் எண்ணிக்கை குறைவடையவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில், தற்போது நடைபெற்றுவரும் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர் மகிந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment