Thursday, November 8, 2018

ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளராக எஸ்.பீ.திஸாநாயக்க நியமனம்

08.11.2018

ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளராக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனுடன் தொடர்புடைய நியமனக்கடிதத்தை இன்று அமைச்சருக்கு வழங்கியுள்ளதாக அந்த அமைச்சின் உயரதிகாரியொருவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

அதன்படி , அமைச்சர் நாளைய தினம் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment