Thursday, November 22, 2018

பிள்ளையான் உள்ளிட்ட எட்டு பேரின் வழக்கு ஜனவரி மாதம் 9ம் திகதிக்கு ஒத்திவைப்பு..!

NOVEMBER 22, 2018

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் 07 பேருக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில், சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பான விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த வழக்கு விசாரணை நேற்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த விசாரணைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 9ம் திகதிக்கு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.இஸ்ஸதீன் ஒத்தி வைத்தார்.

கடந்த 2005ம் ஆண்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.

அந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களாக பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசன்துரை சந்திரகாந்தன் உட்பட்டோர் கைது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment