November 22, 2018
3.5 மில்லியனுக்கும் அதிகம் பெறுமதியுடைய ஐஸ் ரக போதை பொருளுடன் சென்னையில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 300 கிராம் ஐஸ் ரக போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் இதற்கு முன்னரும் வெளிநாட்டு சிகரெட்களை இலங்கைக்குள் கடத்த முற்பட்ட போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று (22) ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர், மேலும் 7 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளார்.
சந்தேக நபர் வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 52 வயதானவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment