02.11.2018
நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான சமாதான நீதவான்களின் வருடாந்த பேரவை இப்பேரவை துறையில் சிறப்பாக பணியாற்றிய சமூக சேவையாளர்களுக்கு தேசகீர்த்தி விருது வழங்கி வருகிறது.
அந்தவகையில் இவ்வாண்டு சிறந்த சமூக செயற்பாட்டாளராக செயற்பட்டார் என்ற காரணத்திற்காகவும், நீதி மற்றும் மனித உரிமைகளை நிலை நாட்ட பாடுபட்டார் என்ற அடிப்படையிலும் இம் முறை இறக்காமத்தைச் சேர்ந்த இவ் அமைப்பின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் சட்டத்தரணி பாறூக் சாஹிப் அவர்களுக்கு தேசகீர்த்தி விருது வழங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந் நிகழ்வு நாளை 3 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் முன்னாள் நீதி அமைச்சர் தலதா அத்துகோரல அவர்களின் கரங்களால் இவ் விருது வழங்கப்படவுள்ளது.
இவ் விழாவிற்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் , ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஆகியோரும் பல்வேறுபட்ட சர்வதேச அமைப்புக்களின் தூதுவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment