Friday, October 5, 2018

Light Rail திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

05.10.2018

கூட்டாட்சி அரசினால் நீண்டகாலமாக பேசப்பட்டு வந்த Light Rail திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதன் நிர்மாணப் பணிக்கான வரைபுகள் பெறப்படவுள்ளதோடு கடவத்தை மற்றும் கொழும்பு கோட்டை உடாக ராகமயிலிருந்து கிருலப்பன வரையிலான ரயில் பாதையும், பொரளை - நுகேகொட - பிலியந்தல வழியாக களனியிலிருந்து மொரட்டுவ வரையிலுமான பிறிதொரு ரயில் பாதையும், அங்கொட - கொஸ்வத்தை ஊடாக ஹுனுபிட்டியவிலிருந்து கொட்டாவ வரையான பாதையும் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு வெளிநாடுகளில் முறைமை பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment