Saturday, October 6, 2018

DIG நாலக்க, நாமல் குமார ஆகியோருக்கு நீதவான் நீதிமன்றம் உத்தரவு

October 6, 2018

court 4
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழலுக்கு எதிரான படை அணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோரை எதிர்வரும் 08 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்ய சதி மேற்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் என்பவற்றினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

0 comments:

Post a Comment