Wednesday, October 24, 2018

விக்கினேஸ்வரன் புதிய அரசியல் கட்சி நிகழ்வை புறக்கணித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

.
-October 25, 2018

:வடக்கு மாகாண சபை  நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ள நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சரின் அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடுகள் குறித்துL to அறிவிப்பதற்கென தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செயெ்யப்பட்ட இன்றைய மக்கள் எழுச்சிக் கூட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புறக்கணித்துள்ளது.

முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவார் என முன்னமே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்துவரும் மாகாணசபைத் தேர்தல் உள்ளிட்ட தேர்தலிகளில் அவர் யார் யாருடன் கூட்டணி வைப்பார் ? அதன்போது தங்களின் பங்களிப்பு சசங என்பது உள்ளிட்ட விடையங்களில் தெளிவு ஏற்படாத நிலையில் இன்றைய மக்கள் எழுச்சிக் கூட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புறக்கணித்திருந்ததாக தெரியவந்துள்ளது.

தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் தரப்புக்களும் நேற.றைய நிகழ்வில் பங்கேற்றவேண்டும் என விரும்பியிருந்த இன்றைய நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான தமிழ் மக்கள் பேரவையினர் அன் றைய நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்களைப் பங்கேற்கவைப்பதற்காக நேற்று முன்தினம் இரவு அவர்களுடன் சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்தியிருந்ததாகவும் எனினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்றைய நிகழ்வில் பங்கேற்க மறுத்துவிட்டதாக பேரவை முக்கியஸ்தர் ஒருவர் வாகீசத்திற்குத் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment