October 25, 2018
நடிகர் பிரபுதேவாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் நடிகர் ஹரிகுமார்.
நடன இயக்குநராகப் பணியாற்றிய அவர், பின்னர் தூத்துக்குடி, மதுரை சம்பவம் போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். ந்நிலையில் பிரபுதேவாவைப் போலவே அவரும் தற்போது இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.
இந்தப் படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் முடிவடைந்து நாளை முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்நிலையில் படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிக்க சம்யுக்தா ஹெக்டே என்ற கன்னட நடிகை ஒப்பந்தமாகியுள்ளார்.
இவர் கன்னட பிக்பாஸ் 5-ல் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்து எட்டு நாட்களில் வீட்டை விட்டு வெளியேறியவர். இந்தப் படத்தில் காலா பட நடிகை ஈஸ்வரி ராவ் மற்றும் யோகிபாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.






0 comments:
Post a Comment