Friday, October 5, 2018

அடங்கா பிடாரிப் பெண்கள் யார் ?கணவனுக்கு கட்டுப்படாத பெண்கள் யார்?

05.10.2018

அடங்கா பிடாரிப் பெண்கள் கணவனுக்கு கட்டுப்படாத
பெண்களின் எண்ணிக்கை நமது சமுதாயத்தில் தற்போது அதிகரித்து வருவது ஒரு கசப்பான உண்மை. கணவனின் வருவாய்க்கு அதிகமாக செலவு செய்யும் குடும்ப பெண்கள் அதிகரித்து விட்டார்கள்.

கணவன் ஹலாலாக சம்பாதிக்கிறாரா? or ஹராமாக சம்பாதிக்கிறாரா ? என்பது கூட தெரியாமல் ஆடம்பர வாழ்க்கைஆசைப்பட்டதெல்லாம் வாங்க வேண்டும் என்ற பேராசை இன்று அவர்கள் உள்ளத்தில் ஆணித்தரமாக பதிந்து விட்டது.

தனக்கு கீழ் உள்ளவர்களைப் பார்த்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் நிலை மாறி தனக்கு மேல் உள்ளவர்களைப் பார்த்து ஏங்கி,ஏங்கி பெருமூச்சு விடும் பெண்கள் அதிகரித்து விட்டார்கள்.

பணமே வாழ்க்கையாகி போச்சு.அதை பயன்படுத்தி எதையும் சாதிக்க முடியும் என்ற துர்பாக்கிய நிலை உருவாகி விட்டது. பணத்துக்காக எதையும் செய்யும் ஈனத்தனமான பெண்கள் உருவாகி விட்டார்கள்.

இதனால் எத்தனையோ குடுப்பங்கள் சிதைந்து சீரழிந்து வருகின்றன. விவாகரத்துக்கள் அதிகரித்து விட்டது. அதனால் குழந்தைகள் சீரழிந்து தறுதலையாகும் அபாயம் பெருகி வருகிறது.

குடும்பங்கள் ஒற்றுமை இல்லை குடும்ப உறுப்பினர்களின் உள்ளங்கள் உடைந்து வருகிறது. கணவன் மனைவி உறவில் சந்தேகம் பெருகி விட்டது. குமரிப் பெண்களின் ஓட்டம் ஒரு புறம் இருக்க, திருமணமான பெண்கள் கூட கணவனை விட்டும் ஓடும் அவல நிலை அதிகரித்து விட்டது.கள்ளப் பார்வையும், கள்ளத் தொடர்புகளும் சமுதாயத்தை நாறடித்துக் கொண்டிருக்கிறது.கிட்டத்தட்ட நமது சமுதாய பெண்கள். பனீ இஸ்ராயில்களின் பெண்களின் நிலைகளுக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்.

அவர்கள் அந்த சமுதாயம் அழிவுக்கு காரணமாகி இருந்தது போல, இந்த சமுதாய அழிவுக்கு இந்தக்கால பெண்கள் காரணமாக இருக்குறார்கள் . எனவே பெற்றோர்களாகி நாம் பிள்ளைளுக்கு கல்வி அறிவை ஊட்டுவது போல அதனுடன் மார்க்க கல்வியையும் சேர்த்து ஊட்டுவது கட்டாயமாக எண்ணுங்கள் மார்க்கக் கல்வி நம்மை இம்மைக்கு மறுமைக்கும் நன்மையே பயக்கும்

இன்ஷாஅல்லாஹ்.

படித்ததில் பிடித்தது.

இதை அதிகம் Share செய்யுங்கள் எங்கையோ இருக்கும் ஒரு உள்ளமாவது திருந்தட்டும்

0 comments:

Post a Comment