Wednesday, October 3, 2018

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் அபிவிருத்திக்கு உதவக்கூடிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் அவதானம்

03.10.2018

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் அபிவிருத்திக்கு உதவக்கூடிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

குறித்த மாகாணங்களின் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் உள்ளடக்கிய வகையில் அவற்றில் அடிப்படை வசதிகள் மற்றும் நிறுவனங்களின் ஆற்றல்களை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், உள்ளுராட்சி மன்றங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பிரதேச அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது.

எனினும், குறிப்பிட்ட பிரதேசங்களின் 134 உள்ளுராட்சி மன்றங்களில் மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை பெற்றுக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த திட்டத்திக்காக உலக வங்கியின் பங்களிப்பை 70 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிரித்துக்கொள்வதற்காக மாகாண சபைகள் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை , திரவ இயற்கை எரிவாயு மின்னிலையம் ஒன்றை ஹம்பாந்தோட்டையில் அமைப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகின்றது.

திரவ இயற்கை எரிவாயு மூலம் செயற்படக்கூடிய 400 மெகா வோல்ட் மின் அழுத்தத்தைக் கொண்ட மின் உற்பத்தி நிலையம் ஒன்று சீன மற்றும் இலங்கை அரசாங்கத்திற்க்கிடையில் கூட்டுத் திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை இதற்கு முன்னர் அனுமதி வழங்கியிருந்தது.

இதற்கமை ஹம்பாந்தோட்டை மற்றும் இலங்கை மின்சார சபைக்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்காக மின் சக்தி மற்றும் துப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0 comments:

Post a Comment