(படங்கள்)
05.10.2018
இறக்காமம் மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக மாற்றுவதற்கான கலந்துரையாடல் பாடசாலையின் அதிபர் ஏ.எச்.ஜெஸீம் அவர்களின் தலைமையில் கீழ் இன்று 05 பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட பழைய மாணவர்கள் சங்கம் பாடசாலை அபிவிருத்திக் குழு மற்றும் பொது அமைப்புகள் கட்சி அமைப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு இப் பாடசாலையை தேசிய பாடசாலையாக மாற்றுவது தொடர்பாக கருத்துகளும் பல வாதப் பிரதிவாதங்களும் இடம்பெற்று இறுதியாக
இப்பாடசாலையை தேசிய பாடசாலையாக மாற்றுவதற்கு
ஏழு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது
இதேவேளை இக்கூட்டத்தில்
கலந்துகொண்ட இறக்காமம் ஜும்மா பள்ளிவாசலில் தலைவர் ஏ.கே.றவூப் மௌலவி இறக்காமம் கோட்டக் கல்விப் பணிப்பாளர் யூ.எல் மஃமூது லெவ்வை அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரியின் விரிவுரையாளர் ஜே.நழீம் இறக்காமம் உதவி கல்வி பணிப்பாளர் எஸ் எல்.எம் நிஸார் இறக்காமம் கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.ஆர்.எம்.அமீன் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த 7 பேர் கொண்ட குழுவை நியமனம் செய்தனர்
உறுப்பினர்கள்
01 பாடசாலை அதிபர்
ஏ.எச்.ஜெஸீம் அதிபர் SLPS
02 பெரிய பள்ளிவாசல் தலைவர் றஊப் மௌலவி BA
03 கோட்டக்கல்வி அதிகாரி மஃமூது லெவ்வை B.ED
04 UPA அமைப்பாளர்
கே.எல்.சமீம் BA
05 SDCயின் செயலாளர்
ஏ எல் நெளபீர் BA
06 OBAயின் உறுப்பினர் A.மர்சூக் BBA
07அஸ்ரபியன் செயலாளர்
ஏ.எச் றகீப் BA






0 comments:
Post a Comment