05.10.2018
2018ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 3,55,326 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
இதில் தமிழ் மொழி மூலம் 87,556 மாணவர்களும், சிங்கள மொழி மூலம் 67,770 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment