Friday, October 26, 2018

குடும்பத்தகராறு வன்முறையாக மாறி மோதலில் மகனை கத்தியால் குத்திய தந்தை பயத்தில் தூக்கிட்டு தற்கொலை.

   October 26, 2018

யாழ்ப்பாணத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் உயிர்ப் பலி வரை சென்றுள்ளது.

நேற்றிரவு வடமராட்சியில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே குடும்பத்தகராறு வன்முறையாக மாறியுள்ளது.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த தந்தை, மகனை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் அச்சமடைந்த தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றது.

கத்திக் குத்துக்கு இலக்கான மகன் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதலுடன் தொடர்புடைய தந்தை தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் இரவு 10 மணியளவில் தந்தை தனது வீட்டுக்குள் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment