October 6, 2018
அரச சேவைக்காகவும் “ட்ரோன” ரக தொழில்நுட்ப கருவியை பயன்படுத்த உள்நாட்டலுவல்கள் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
இதற்கான செயற்பட்டறையொன்று ட்ரோன தொழில்நுட்பம் தொடர்பான அமெரிக்க விசேட நிபுணரான சுமிந்த சில்வாவின் தலைமையில் அண்மையில் நடைபெற்றுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அவசர நிலைமைகளின் போது இந்த தொழில்நுட்பத்தின் தேவை பயனுள்ளது என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த செயலமர்வில் மாவட்ட செயலாளர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள், முப்படைகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
எல்லை நிர்ணயம், அனர்த்த உதவி வழங்கல், கைத்தொழில் பிரதேசங்களை அடையாளம் காணல் போன்ற நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இந்த ட்ரோன தொழில்நுட்ப உதவிகள் பயன்படுத்தப்படுவதாகவும் இந்த செயலமர்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 comments:
Post a Comment