Tuesday, October 2, 2018

அவசர எச்சரிக்கை..!!

02.10.2018

மாத்தறை முதல் பொத்துவில் மற்றும் புத்தளம் முதல் நீர்கொழும்பு வரையான கடல் பிரதேசங்களில், கடற்றொழிலில் ஈடுபடுவதில் இருந்து விலகி இருக்குமாறு மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாகவே, இந்த அறிவுறுத்தலை கடற்றொழில் திணைக்களம் விடுத்துள்ளது.

இதற்கமைய நாளை காலை 6.00 மணி வரையில், குறித்த கடல் பகுதிகளில் பயணங்களை மேற்கொள்ளவோ அல்லது கடற்றொழிலில் ஈடுபடவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, புத்தளம், ஆணமடுவை, ஆடிகமை மற்றும் மதவக்குளம் ஆகிய பிரதேசங்களில் நேற்று இரவு வீசிய கடும் காற்று காரணமாக 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்த அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 ஆயிரம் ருபா இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாகும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

Hiru

0 comments:

Post a Comment