02.10.2018
ஹட்டன் நகரிலுள்ள வியாபார நிலையமொன்றிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட 'ஜெலி' இனிப்புப்பண்டத்தில், உயிரிழந்த நிலையில் நுளம்பு இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்டோபரி ரக ஜெலியிலியே, இவ்வாறு நுளம்பு இருந்தமை தெரியவந்துள்ளது.
தனது பிள்ளைகளுக்குக் கொடுப்பதற்காக, நபரொருவர் ஸ்டோபரி ரக ஜெலிகளை மேற்படி வியாபார நிலையத்திலிருந்து கொள்வனவு செய்துள்ளார்.
மேற்படி நபரின் பிள்ளைகள், ஜெலியை உண்ண முற்பட்டபோதே, அதில் உயிரிழந்த நிலையில் நுளம்பு இருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, ஹட்டன் பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர்களுக்கு இவ்விடயம் குறித்து தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஹட்டன் பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர்கள், மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி
ரஞ்சித் ராஜபக்ஷ






0 comments:
Post a Comment