Tuesday, October 2, 2018

பட்ஜெட் 2019 : மொத்த அரச செலவினம் 4376 பில்லியன் ரூபா.


October 02, 2018

2019 ஆம் ஆண்டுக்கான மொத்த அரச செலவினம் 4376 பில்லியன் ரூபாவாகவும், அடுத்த
ஆண்டு வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை 644 பில்லியன் ரூபாவாகவும் இருக்கும் என நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பதற்காக அண்மையில் அமைச்சரவைக்கு தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட பத்திரத்தின்படி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1% ஆகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2019 ஆண்டுக்கான கடன் சேவைகளுக்காக ரூ. 2,057 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது இலங்கையின் வரலாற்றில் அரசாங்கத்தால் கடனை செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட மிகப்பெரும் தொகையாகும்.

0 comments:

Post a Comment