Sunday, September 2, 2018

வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ள எரிபொருள் விலை

September 2, 2018

சர்வதேச கச்சா எண்ணை சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அன்றாடம் நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

இதனால், கடந்த சில தினங்களாக படிப்படியாக அதிகரித்துக் கொண்டு வந்த பெட்ரோல், டீசல் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி பெட்ரோல் விலை 17 காசுகள் உயர்ந்து சென்னையில் ரூ.81.92 ஆக விற்பனையாகிறது.

டீசல் விலையும் 36 காசுகள் உயர்ந்து, சென்னையில் ரூ.74.77 ஆகவும் விற்பனையாகிறது.

இதேபோல், டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் கார், லொறி, பஸ் மற்றும் இருசக்கர வாகன உரிமையாளர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment